Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மன உளைச்சலில் இருந்த மருத்துவர்… சர்ஜிகல் பிளேடு உதவியுடன் தற்கொலை முயற்சி….!!

கீழ்பாக்கம் மருத்துவமனையில் பணியாற்றும் பயிற்சி மருத்துவர் தற்கொலை முயற்சி செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் உள்ள விருகம்பாக்கம் பகுதியில் கணபதி ராஜ் நகரில் உள்ள ரிஷோத் என்ற 23 வயது இளம் நபர் மருத்துவ பட்டப்படிப்பு முடித்து விட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப் பிரிவில் பயிற்சி மருத்துவராக பணியாற்றுகிறார். இந்நிலையில் சில நாட்களாகவே குடும்ப பிரச்சனை காரணத்தால் மன உளைச்சலுக்கு ஆளான ரிஷோத் அதற்கான மருந்து எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நேற்று காலை சுமார் 5 மணியளவில் விடுதியில் உள்ள கழிவறைக்கு சென்ற ரிஷோத் நீண்ட நேரத்திற்கு பிறகும் வெளியே வராததால் சந்தேகித்த அவரது நண்பர்கள் கழிவறையின் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது ரிஷோத் சர்ஜிக்கல் பிளேடால் கையை அறுத்துக் கொண்ட நிலையில் மயங்கி கிடந்தார். அதைக்கண்டு அதிர்ச்சிக்குள்ளான மாணவர்கள் ரிஷோத்தை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதையறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் சிகிச்சைக்குப் பின்னர் உடல்நிலை சரியாகி வருவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

Categories

Tech |