புதுக்கோட்டை மாவட்டத்தில் மனநலம் பாதித்த பெண் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக இறந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வளவம்பட்டி கிராமத்தில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனநலம் பாதிக்கப்பட்ட பானுமதி என்ற மனைவி இருந்தார். இந்நிலையில் வெளியே சென்ற பானுமதி வீட்டிற்கு வரவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதனையடுத்து கள்ளுக்காரன் பட்டியிலுள்ள தைல மர காட்டில் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை செய்தபோது அது பானுமதியின் உடல் என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல் துறையினர் பானுமதி உடலை அங்கிருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மேலும் காவல் துறையினர் பானுமதி இறந்ததிற்க்கான காரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.