வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கீழ்நேத்தபாக்கம் கிராமத்தில் மூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 2-வது மகனான கார்த்திக் என்பவருக்கு திருமணம் செய்து வைக்க 2 வருடங்களாக பெண் பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பெற்றோர் ஆடி மாதம் கழித்து திருமணம் செய்து வைப்பதாக தெரிவித்துள்ளனர். ஆனால் மனவேதனையடைந்த கார்த்திக் கடந்த 30-ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கார்த்திக்கை உடனடியாக மீட்டு ஆக்கூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதன் பின் மேல் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது கார்த்திக்கை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த தூசி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.