மேற்கு வங்கத்தில் மக்கள் மம்தா பானர்ஜியை கிளீன் போல்ட் ஆக்கி விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநிலத்தில் 294 சட்டமன்ற தொகுதிகளில் 8 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடந்து கொண்டிருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு இந்த தேர்தலில் மிகப்பெரிய போர் நடந்து கொண்டிருக்கிறது. பாஜக தங்களது கட்சியின் முழு பலத்தையும் இறக்கி தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்து வருகிறது. அதுமட்டுமன்றி பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் செய்ய ஆரம்பித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து வருகின்றார்கள். இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதுமட்டுமன்றி மம்தா பானர்ஜி திங்கட்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி வரை 24 மணி நேரம் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் தேர்தல் நடைமுறைகளை பாதிக்கும் வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் நடத்தை விதிகளை மீறி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் கமிஷனின் இந்த நடவடிக்கை ஜனநாயகம் அற்றது என்றும் ஜனநாயகத்தில் இது ஒரு கருப்பு தினம் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் மக்கள் மம்தாவை கிளீன் போல்ட் ஆகி விட்டனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மக்கள் மம்தாவை கிளீன் போல்ட் ஆக்கி விட்டனர். அத்தோடு அவரது ஒட்டுமொத்த குழுவையும் தளத்தை விட்டு வெளியேறும்படி செய்துள்ளனர். மேற்கு வங்க மக்கள் பாஜகவை எதிர்பார்க்கின்றனர் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.