மேற்கு வங்க முதல்வர் மம்தாவை தோற்கடிக்க பாஜக மாஸ்டர் ப்ளான் போட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் முதற்கட்ட சட்டமன்ற தேர்தல் கடந்த வாரம் நடந்து முடிந்தது. இதனையடுத்து இரண்டாம் கட்ட தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை நந்திகிராம் தொகுதியில் தோற்கடிக்க பாஜக திட்டமிட்டு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. பாஜக சார்பில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி 50 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் மம்தாவை வீழ்த்துவார்.
மம்தாவை தோற்கடித்ததன் மூலம் தேர்தலுக்குப் பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் எளிதாக தங்கள் பக்கம் வளைக்க முடியும் என பாஜக மாஸ்டர் ப்ளான் போட்டு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் நந்தி கிராமத்தில் வெளிமாநிலத்தில் இருந்து வந்த ரவுடிகள் வாக்குப்பதிவுக்கு இடையூறாக இருப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். அதுமட்டுமன்றி துணை ராணுவ படையினர் உள்ளூர் மக்களை வாக்களிப்பதற்கு அனுமதிக்கவில்லை எனவும் புகார் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.