பாஜக ஆட்சிக்கு வந்தால் மேற்கு வங்கத்தில் அரசியல் சார்ந்த கலவரங்கள் முடிவுக்கு வரும் என உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தில் சாந்திப் ஊரிலுள்ள உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான திரு அமித்ஷா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் ஷிபில்குச்சி சம்பவத்தை தவிர மேற்குவங்க தேர்தலில் எந்த வித அசம்பாவிதங்களும் ஏற்பட வில்லை என்றும், இதுவரை வாக்குப்பதிவு சுமுகமாகவே நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.
மேற்குவங்கத்தில் கொல்லப்பட்ட நான்கு பேருக்கு மட்டுமே முதல்வர் மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்தார் என்றும், 5வதாக கொலையான ஆமான் பர்மனுக்கு இரங்கல் தெரிவைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.அவர் ராஜ்வன்ஸ்ரீ சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் அவருக்கு மம்தா இரங்கல் தெரிவிக்க வில்லை என்றும் திரு அமித்ஷா குற்றம் சாட்டினார். மம்தா பானர்ஜியின் இந்த சாதிய அரசியல் மேற்கு வங்கத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவித்தார்.