தேர்தல் பரப்புரையின் போது மம்தா பானர்ஜி கூறியதாக சில போலியான தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்தியாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு மே இரண்டாம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 3-வது முறையாக மீண்டும் ஆட்சியை எட்டியது. இத்தேர்தலில் மம்தா பானர்ஜி நந்திகிராமம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் நந்திகிராமம் தொகுதியில் தோல்வியை சந்தித்தால் நான் அரசியலில் இருந்து விலகுவதாக மம்தா பானர்ஜி தெரிவித்ததாக கூறும் தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுதொடர்பாக வைரல் பதிவுகளை ஆய்வு செய்தபோது, மம்தா பானர்ஜி அது போன்று எதுவும் தெரிவிக்கவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இவரை எதிர்த்து நந்தி கிராமத்தில் போட்டியிட்ட சுவெந்து அவர்கள்தான் மம்தாவை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிப்பதாக தெரிவித்திருந்தார். அதன்பின் அவர் 1956 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் அந்தவகையில் மம்தா கூறியதாக குறிப்பிடப்பட்டு இருக்கலாம் என தகவல்களில் சிறிதளவும் உண்மை இல்லை என ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இதுபோன்று போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலியான செய்திகளால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு சில சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் நேரிடும் அபாயம் ஏற்படுகிறது.