புதுச்சேரியில் நடைபெற்ற தமிழ் பயிற்று மொழி மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், சிறுவயதில் இருந்தே தாய்மொழியான தமிழில் கல்வி கற்க வேண்டும். அதை தவிர கூடுதலாக மற்றொரு மொழியும் கற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அனைவருமே தமிழ் மொழியில் தான் பெயர் வைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர் ஆங்கிலத்தில் அம்மா, அப்பாவை “மம்மி, டாடி” என்று கூப்பிடுவதை விட நம் தாய்மொழியான தமிழில் “அம்மா, அப்பா” என்று அழைக்கும் போது தான் அன்பு அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.