Categories
சினிமா தமிழ் சினிமா

மயக்கம் போட்டு விழுந்த பிரபல தமிழ் இயக்குநர்….. கூட்டம் கூடிய மக்கள்…!!!!

இயக்குனர்களின் இமயம் என்று அழைக்கப்படும் பாரதிராஜா தற்போது இயக்குவதை நிறுத்திவிட்டு பல படங்களில் குணசத்திர வேடங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் நடித்திருந்தார் . விடுதலை என்ற படத்தில் நடிப்பதாக இருந்த நிலையில் அந்த படத்தில் இருந்து விலகினார். இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னையில் இருந்து மதுரை சென்ற அவர், விமான நிலையத்தில் திடீரென மயக்கம் அடைந்துள்ளார். இதையடுத்து அங்கு கூட்டம் கூடியது. இதையடுத்து உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |