15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது குழந்தைகள் நல குழுவினர் புகார் அளித்துள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில்15 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி பிரசவத்திற்காக அங்குள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 11-தேதி இந்த சிறுமிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் சிறுமியும், அவரது பெற்றோரும் குழந்தைகள் நல குழுவினரிடம் பிறந்த குழந்தையை ஒப்படைத்து விட்டனர். இதனையடுத்து சிறுமி எப்படி கர்ப்பமானார் என்பது குறித்து குழந்தைகள் நல குழுவினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் 28 வயதுடைய வாலிபர் சாப்பாட்டில் மயக்க மருந்தை கலந்து கொடுத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை எழுத்துப்பூர்வமாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் குழந்தைகள் நல குழுவினர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அந்த வாலிபர் மீது புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.