பீகார் ககாரியாவிலுள்ள 2 அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராமப் பெண்களுக்கு மயக்க மருந்து இன்றி கர்ப்பத் தடை அறுவை சிகிச்சை செய்ய்யபட்டது. இதன் காரணமாக பெண்கள் அலறி துடித்துள்ளனர். இதையடுத்து இது தொடர்பாக பெண்கள் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் அறுவை சிகிச்சை செய்துகொண்ட குமாரி பிரதிமா கூறியதாவது “நான் வலியால் துடித்தேன்.
அப்போது 4 பேர் என்னுடைய கைகளையும், கால்களையும் இறுக்கமாகப் பிடித்துகொண்டனர். அதன்பின் மருத்துவர் தனது பணியை முடித்தார். அறுவை சிகிச்சைக்குப் பின்புதான் எனக்கு மயக்கம் ஏற்பட்டது” என்று கூறினார். இதுபற்றி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் அமர்நாத் ஜா, அந்த 2 சுகாதார மையங்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.