பீகார் மாநிலத்தில் உள்ள ககாரியாவில் இரண்டு அரசு பொது சுகாதார மையங்களில் சுமார் 24 கிராம பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்காமல் கர்ப்பத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அறுவை சிகிச்சையின் போது அந்த பெண்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண் ஒருவர் கூறுகையில், நான் வழியால் அலறி துடித்தேன்.
நான்கு பேர் என் கை கால்களை பிடித்துக் கொண்டனர். ஆப்ரேஷனுக்கு பிறகு எனக்கு வலியை மறக்க வைக்க ஏதோ ஒன்று செலுத்தப்பட்டது என அவர் கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த மருத்துவர் கூறுகையில், மயக்க மருந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் சில பெண்களுக்கு அது வேலை செய்யவில்லை. ஒவ்வொரு நபருக்கும் வெவ்வேறு உடல் அமைப்பை இருப்பதால் அது பயனுள்ளதாக இல்லை என விளக்கம் அளித்துள்ளனர். இருந்தாலும் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது.