Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மயங்கிய நிலையில் கிடந்த உரிமையாளர்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

டீக்கடை உரிமையாளர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரம் அருகே அஞ்சுகண்டறை‌ செக்கோட்டு விளை பகுதியில் ரமேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொந்தமாக டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் ரமேஷ் திடீரென விஷம் குடித்துவிட்டு மயங்கிய நிலையில் வீட்டில்  கிடந்துள்ளார்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் ரமேஷை மீட்டு சிகிச்சைக்காக குலசேகரம் பகுதியில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ரமேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குலசேகரம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |