Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த நபர்…. பொதுமக்கள் அளித்த தகவல்….. போலீஸ் விசாரணை…!!

மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமலேரிமுத்தூர் ரயில்வே மேம்பாலம் அருகே 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மயங்கி கிடந்த நபரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த நபர் யார் ? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |