Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சுந்தரப்பட்டியில் விவசாயியான சிவசுப்பிரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட சிவசுப்பிரமணி பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவசுப்பிரமணிதனது வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.

இதனையடுத்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த முதியவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சிவசுப்பிரமணி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |