Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

மயங்கி கிடந்த வாலிபர்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்….. போலீஸ் விசாரணை…!!

வடமாநில தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கங்கைகொண்டான் சிப்காட்டில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ராம் என்பவர் தங்கியிருந்து தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ராம் தனது அறையில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ராம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராம் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |