தண்டவாளத்தில் மயங்கி கிடந்த வாலிபர் மீது ரயில் ஏறி இறங்கிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மாப்படுகை ரயில்வே கேட் பகுதியில் என்ஜினீயரான சிவா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக வேலையை இழந்த சிவா, தனது சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையன்று ரயில்வே கேட் பகுதியிலுள்ள தண்டவாளத்தில் மயங்கி கிடந்துள்ளார்.
அச்சமயம் மயிலாடுதுறையை நோக்கி சென்ற ரயில் ஒன்றின் சக்கரத்தில் சிவாவின் கால்கள் சிக்கி சிதைந்தன. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிவாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப் பதிந்த காவல்துறையினர் சிவாவின் இறப்பு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.