விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியம் அருகே ஓடியந்தல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திடீரென விஷம் குடித்து விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
அதன்பின் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கிருஷ்ணன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து பகண்டை கூட்ரோடு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின்படி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.