நாகை அருகே மயங்கி விழுந்து முதியவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் நகராட்சிக்கு உட்பட்ட புஷ்கரணி கிராமத்தை சேர்ந்த சண்முகம் (90) என்பவர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவர் தொடர்ந்து மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவ தினத்தன்று இரவு சாப்பிட்ட பிறகு சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பிடாமல் துங்கியுள்ளார். இதையடுத்து மறுநாள் காலையில் பார்த்தபோது முதியவர் சண்முகம் மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.ஆனால் சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக உயிரிழந்தார் . இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.