Categories
உலக செய்திகள்

மயங்கி விழுந்த தனது தாயை…. நெருங்கவிடாமல் பாதுகாக்கும்…. குட்டியின் பாசப்போராட்டம்…!!

தாய்லாந்து நாட்டில் யானை ஒன்று தன்னுடைய குட்டியோடு உணவு தேடி செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது யானைக்கு ஏற்கனவே அடிபட்டு இருந்த நிலையில் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளது. இதனால் மயக்கம் அடைந்த தன்னுடைய தாயை பாதுகாக்கும் பொருட்டு அந்த குட்டி யானை தன்னுடைய தாயின் பக்கத்தில் யாரும் வராதவாறு அங்குமிங்கும் ஓடி திரிந்துள்ளது. இதை அங்கிருந்த வன ஆர்வலர்கள் வீடியோவாக பதிவு செய்துள்ளனர்.

மேலும் யானையின் பக்கத்தில் வனத்துறை அதிகாரிகள் யாரையும் நெருங்க விடாமல் அந்த குட்டி யானை விரட்டி உள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பொழுது தன்னுடைய தாய்க்காக போராடும் அந்த குட்டியின் பாசத்தை காண்போரை நெகிழச் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |