விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மேல்பாதி சொர்ணா ஊரில் கூலித்தொழிலாளியான ஐயப்பன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காமாட்சி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகன் இருக்கின்றான். இந்நிலையில் ஐயப்பன் தனியார் பேருந்தில் மேல் பட்டாம்பாக்கத்திற்கு சென்றுள்ளார்.
இதனையடுத்து அங்குள்ள சந்ததோப்பு திடலில் திடீரென ஐயப்பன் மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ஐயப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.