தர்மபுரி மாவட்டத்திலுள்ள நல்லம்பள்ளி அருகே இருக்கும் கிராமத்தில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் உறவினர் வீட்டில் தங்கியிருந்து அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தினமும் சிறுமி சைக்கிளில் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து பள்ளிக்கு சென்ற வருவது வழக்கம். கடந்த 16-ஆம் தேதி இண்டூர் பேருந்து நிறுத்தத்தை தாண்டி சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது திடீரென சிறுமி மயங்கி விழுந்தார்.
பின்னர் மாணவி பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மாணவியிடம் விசாரித்த போது சைக்கிளில் சென்ற போது மயங்கி விழுந்ததாகவும், தன்னை சிலர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் தெரிவித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாணவி கூறிய அடையாளத்தை வைத்து 2 பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.