அப்துல் கலாமின் கனவுக்கு உருவம் கொடுத்து வந்தவர் நடிகர் விவேக்(59). சமூக ஆர்வலராகவும் விளங்கினார். நகைச்சுவையுடன் சமூகத்துக்கு தேவையான கருத்துக்களை எடுத்துரைத்தவர். நடிகர் விவேக்கை இயக்குனர் பாலச்சந்தர் திரைப்படத்தில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார். விவேகம் மிக்க கருத்துக்களை மக்கள் மனதில் விதைத்தவர். இந்நிலையில் இவருக்கு நேற்று ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிவித்தது. இதையடுத்து இன்று காலை 4.35 மணியளவில் காலமானார். அவருடைய இறப்புக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் உடல் அவருடைய வீட்டில் வைக்கப்பட்டு ரசிகர்களும், பொதுமக்களும், திரையுலகினரும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து நடிகர் விவேக் அவர்களின் உடல் தற்போது மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பொதுமக்கள், திரைத்துறையினர் என ஏராளமானோர் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளனர்.