Categories
மாநில செய்திகள்

மயான பணியாளர்களும் முன்கள பணியாளர்களே…. அமைச்சர் மா.சுப்பிரமணியன….!!!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருவதால்,இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத  காரணத்தால், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமன்றி நேற்று முதல் பல புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ஏற்கனவே இருந்த ஊரடங்கை விட மேலும் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

மேலும் கொரோனா தடுப்பு பணியில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் பணி மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மட்டுமல்லாமல் முன் களப் பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என அனைத்துத் தரப்பினரும் கொரோனா களப்பணியில் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். அதனால் பத்திரிக்கையாளர்களை முன்கள பணியாளர்களாக தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து மின் ஊழியர்களையும் முன்கள பணியாளர்களாக அறிவிக்க வேண்டும் என சீமான் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் மயானங்களில் பணியாற்றுபவர்கள் அனைவரும் முன்கள பணியாளர்களாக கருதப்படுவர் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மயான பணியாளர்களுக்கு தேவையான உதவிகளை அரசு நிச்சயம் வழங்கும். மயானப் பணியாளர்கள் கொரோனா காலத்தில் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி முதல்வரிடம் தெரிவிக்கப்படும். மேலும் ரெம்டெசிவிர் விற்பனையை முறைப்படுத்த உயர் அலுவலர்கள் உடன் ஆய்வு செய்ய உள்ளோம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |