மயிலாடுதுறை ஐயாறப்பர் கோவிலில் நேற்று புதிய தேர் வெள்ளோட்டம் சிறப்பாக நடைபெற்றது.
மயிலாடுதுறையில் சிறப்பு வாய்ந்த ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமானது. இந்த கோவிலில் இருந்த தேர் ஏற்கனவே பழுதடைந்து சேதமடைந்த காரணத்தினால் புதிய தேர் தற்போது உருவாக்கப்பட்டது. அதன்படி புதிய தேர் ரூ. 30 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டது. நேற்று அதற்கான வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், தேரை இழுத்து தொடங்கி வைத்தனர்.
இதையடுத்து தேர் நான்கு வீதிகளிலும் சுற்றி அதன்பின் சன்னதியை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அதன்பின் ரூ.7 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட செட்டில் நிறுத்தப்பட்டது. முன்னதாக கோவிலில் சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெற்றது.