Categories
மாவட்ட செய்திகள்

“மயிலாடுதுறை திருக்கடையூர் பகுதிகளில் சுற்றித் திரியும் பன்றிகள்”…. நோய் பரவும் அபாயம்…. பொதுமக்கள் அச்சம்…!!!!!

திருக்கடையூர் பகுதிகளில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிவதால் நோய் பரவும் அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடையூரில் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ள நிலையில் இங்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்ற நிலையில் பஸ் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள தெருக்களில் ஏராளமான பன்றிகள் சுற்றித் திரிகின்றது.

இதனால் வணிக வளாகங்கள், உணவகங்கள், கோவில்களுக்கு வருபவர்களுக்கு பன்றிகள் இடையூராக இருக்கின்றது. மேலும் நோய் தொற்று பரவும் அபாயமும் இருக்கின்றது. வாகனங்களில் செல்லும் பொழுது பன்றிகள் குறுக்கே வருவதால் அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றது. இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

Categories

Tech |