Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

மயிலாடுதுறை மாத்தூர் கைலாசநாதர் கோவில்… கோலாகலமாக கொண்டாடப்பட்ட குடமுழுக்கு விழா… பக்தர்கள் சிறப்பு தரிசனம்..!!

மயிலாடுதுறை மாவட்டம் மாத்தூர் கைலாசநாதர் கோவிலில் கோலாகலமாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மாத்தூர் கிராமத்தில் சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதற்கு முன்னதாக கணபதி ஹோமம் கடந்த 19-ஆம் தேதி அன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு அலங்கார பூஜைகளும், தீபாராதனைகளும் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்றது. மேலும் யாக சாலை பூஜை நேற்று காலை நடைபெற்றது. ஹோமங்களுக்கு யாகசாலையில் பூஜைகள் நடைபெற்றது.

அதன்பின் கோபுர விமானத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த கோவில் விழாவிற்கான முன் ஏற்பாடுகளை மாத்தூர் கிராம மக்கள் செய்தனர். அதன் பின் கோவிலுக்கு வந்த அனைத்து பக்தர்களுக்கும் அன்னதானம் அளிக்கப்பட்டது. இதையடுத்து 48 நாட்கள் தொடர்ந்து மண்டல அபிஷேகம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |