Categories
மாநில செய்திகள்

மயிலாப்பூர் இரட்டை கொலை வழக்கு…. துரிதமாக செயல்பட்ட காவல்துறை…. முதல்வர் பாராட்டு…!!!!!!

ஆடிட்டர் கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல் துறையினரை தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த 17.5.2022 தேதியன்று சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா போன்றோர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய அவ்வீட்டில் ஓட்டுனராக பணியாற்றி வந்த நேபாளத்தை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் டார்ஜிலிங்கில் சேர்ந்த அவனது கூட்டாளி ரவி ராய் போன்றோர் சென்னை மாநகர காவல் துறையினர் ஆந்திர காவல்துறையினர் உதவியுடன் ஓங்கோலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டு அவர்கள் கொலை செய்து புதைத்த இடத்தை அடையாளம் காட்டியுள்ளனர். மேலும் குற்றவாளிகளிடம் இருந்து 1127 சவரன் தங்க நகைகள், 2 வைர மூக்குத்திகள், வெள்ளி நகைகள் மற்றும் கார் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த மயிலாப்பூர் மாவட்ட காவல் துணை ஆணையர் திஷா மிட்டல் காவல் உதவி ஆணையர்கள் எம். குமரகுருபரன் மற்றும் டி. கௌதமன், காவல் ஆய்வாளர் எம். ரவி, உதவி ஆய்வாளர்கள் சி. கிருஷ்ணன், வி. மாரியப்பன், எம். அன்பழகன், காவலர் நிலை-I டி. சங்கர் தினேஷ், காவலர் எஸ். கதிரவன் போன்றோரை முதல்வர் ஸ்டாலின் பாராட்டியிருக்கிறார்.

இந்நிகழ்ச்சியின்போது, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் செ. சைலேந்திர பாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் ஆணையர் என். கண்ணன், காவல் இணை ஆணையர் (தெற்கு) பிரபாகரன், மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடன் இருந்துள்ளனர்.

Categories

Tech |