Categories
பல்சுவை

மயிலை காவுவாங்க துடித்த புலி…. சட்டெனெ நேர்ந்த சம்பவம்…. வெளியான பகீர் வீடியோ….!!!!

வனவிலங்குகள் குறித்த பல்வேறு வீடியோக்கள் இப்போது சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வைரலாகி வருகிறது. அவற்றில் சில வீடியோ பார்ப்பவர்களுக்கு பீதியை ஏற்படுத்துவதாகவும், வேடிக்கையானதாகவும், வியப்பில் ஆழ்த்துபவையாகவும் இருக்கும். வன விலங்கு வீடியோக்களைப் பொறுத்தவரையிலும் , அதில் பெரும்பாலானவை வேட்டையாடும் காட்சிகள் இருக்கும். அதன்படி தற்போது புலி மற்றும் மயில் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் புலி காட்டில் மிகவும் ஆபத்தான விலங்காக உள்ளது.

வேட்டையாடுவதை பொறுத்தவரையிலும், புலியின் பிடியில் சிக்கிய விலங்குகள் தப்பிப்பது என்பது மிககடினம் ஆகும். இந்த நிலையில் மயிலை தாக்குவதற்கு புலி வருவதும், அடுத்து நடப்பது என்ன?.. என்பதையும் வீடியோவில் காணலாம். அதாவது, 2 மயில்கள் அருகருகே நிற்பதை வீடியோவில் காணலாம். அப்போது புலி தன்னுடைய சிறகுகளை விரித்திருக்கும் மயிலை நோக்கி செல்கிறது. இந்நிலையில் புலி பாய்ந்த நிலையில், மயில்கள் பறந்து தப்பியது. ஒருகணம் தாமதித்து இருந்தால் மயில் புலியிடம் சிக்கி இருக்கும். புலியின் சத்தம் கேட்டதும் மயில்கள் பறந்து தப்பியதால் உயிர் பிழைத்தது. இந்த வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Animal Power இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@animals_powers)

 

Categories

Tech |