Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மயிலை துரத்தி கடித்த நாய்கள்….. விவசாயி அளித்த தகவல்….. வனத்துறையினரின் செயல்….!!

நாய்கள் கடித்து காயமடைந்த மயிலுக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள வெளிப்பிரிங்கியும் கிராமத்தில் வசிக்கும் விவசாயி தனது வயலுக்கு சென்றுள்ளார். அப்போது நாய்கள் ஆண் மயிலை கடித்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த விவசாயி வாலிபர்களுடன் இணைந்து நாய்களை விரட்டி அடித்தார். இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் 2 வயதுடைய ஆண் மயிலை மீட்டனர். இதனை அடுத்து வனத்துறையினர் கால்நடை மருத்துவமனைக்கு மயிலை கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Categories

Tech |