Categories
பல்சுவை

மயில் தோகை விரித்தால்…. மழை வருமா….? அறிவியல் சொல்லும் உண்மை என்ன….?

நம் நாட்டின் தேசிய பறவை மயில் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.

இந்தியாவின் தேசியப் பறவையாக மயில் இருக்கிறது. இதில் ஆண் மயில் அழகிய தோகையுடன் காணப்படும். இந்த ஆண் மயில் நீலம் மற்றும் பச்சை கலந்த பளபளப்பான நிறத்தில் காணப்படுகிறது. இதில் பெண் மயில்கள் மங்கலான பச்சை கலந்த சாம்பல் நிறம் மற்றும் பளபளப்பான நீல நிறமும் கலந்து காணப்படுகிறது. இந்த மயில்களின் ஆயுட்காலம் 20 ஆண்டுகள் ஆகும். இருப்பினும் மனிதர்கள் செல்லாத இடங்கள் மற்றும் பூங்காக்களில் 40 ஆண்டுகள் மயில்கள் உயிர் வாழும். இந்நிலையில் மயில்கள் சரஸ்வதியின் அடையாளமாகவும், கிரேக்கர்களின் வழிபாட்டிலும் இடம் பெற்றுள்ளது. அதன்பிறகு 1972 வனவிலங்கு தடைச் சட்டத்தின் படி மயில்களை வீட்டில் வளர்க்கக்கூடாது.

இந்த மயில்கள் எலிகள், வண்ணத்துப்பூச்சிகள், சிறிய பாம்புகள், தானியங்கள், பூக்கள், எறும்புகள், விதைகள், தாவரங்கள் போன்றவற்றை உணவாக உட்கொள்கிறது. இவை இலங்கை, இந்தியா, பர்மா போன்ற இடங்களில் பரவலாக காணப்படுகிறது. மழை வருவதற்கு முன்பு மயில்கள் தோகை விரித்து ஆடும் என மக்களால் நம்பப்படுகிறது. ஆனால் இது அறிவியல் பூர்வமாக  நிரூபிக்கப்படவில்லை. அதாவது மயில்கள் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் காரணமாக பெண் மயில்களை கவர்வதற்காக ஆண் மயில்கள்‌ தோகையை விரித்து ஆடுகிறது. இது மழைக்காலத்தின் போது நடைபெறுவதால் மக்கள் மழை வருவதற்கு முன்பாக மயில்கள் தோகை விரித்து ஆடுகிறது என நம்புகிறார்கள்.

Categories

Tech |