Categories
சினிமா தமிழ் சினிமா

‘மரகத நாணயம்-2’ உருவாகிறதா?… தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் தகவல்…!!!

மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தயாரிப்பாளர் டில்லிபாபு தெரிவித்துள்ளார் .

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் ஆதி நடிப்பில் கடந்த 2017-ஆம் ஆண்டு வெளியான மரகத நாணயம் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இயக்குனர் ஏ.ஆர்.கே சரவணன் இயக்கியிருந்த இந்த படத்தில் நிக்கி கல்ராணி கதாநாயகியாக நடித்திருந்தார் . மேலும் முனீஸ்காந்த், ஆனந்தராஜ், காளி வெங்கட், எம்.எஸ்.பாஸ்கர், அருண்ராஜா காமராஜ், டேனியல் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

Maragatha Naanayam movie review: The trail of this emerald artefact is  engaging and thrilling | Entertainment News,The Indian Express

டில்லிபாபு தயாரித்த இந்த படத்திற்கு திபு நினன் தோமஸ் இசையமைத்திருந்தார். இந்நிலையில் மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தயாரிப்பாளர் டில்லி பாபு டுவிட்டர் ஸ்பேஸில் தெரிவித்துள்ளார். விரைவில் இந்த படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |