Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மரக்கிளையில் சுற்றி இருந்த ராஜநாகம்…. அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள்…. வனத்துறையினரின் செயல்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை அருகே உருளிக்கல் எஸ்டேட் தேயிலை தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது தொழிற்சாலை வளாகத்தில் இருக்கும் மரத்தில் ராஜநாகம் ஒன்று பதுங்கி இருந்ததை பார்த்து தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தொழிலாளர்கள் மானாம்பள்ளி வனத்துறையினரிடம் தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து மனித வனவிலங்குகள் மோதல் தடுப்பு குழுவினர் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை வனபாதுகாப்பு அமைப்பு குழு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித்குமார் குழுவினர் வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் மரக்கிளையை வெட்டி கிளையில் சுற்றி இருந்த 11அடி கொண்ட ராஜநாகத்தை சுற்றிவளைத்து பிடித்தனர். பின்னர் மானாம்பள்ளி வனப்பகுதியில் ராஜநாகத்தை பாதுகாப்பாக கொண்டு சேர்த்தனர்.

Categories

Tech |