அங்கோர்வாட் கோவில் கம்போடியாவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 162 ஹெக்டர் ஆகும். இரண்டாம் சூரியவர்மன் என்ற மன்னனால் 12-ஆம் நூற்றாண்டில் இந்த கோவில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவில் சில மன்னர்களின் ஆட்சி காலத்தால் பதினாறாம் நூற்றாண்டில் முழுமையாக கைவிடப்பட்டது.
இதனை அடுத்து 20- ஆம் நூற்றாண்டில் இந்த கோவிலை புதுப்பிக்கும் பணி நடைபெற்றது. இந்த கோவிலில் விஷ்ணுவுக்காக அமைக்கப்பட்ட சன்னதி சுமார் 400 ஆண்டு காலம் பராமரிக்காமல் இருந்ததால் மரங்களால் மூடப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இது போன்ற பல கட்டடங்கள் அந்த கோவிலில் இருக்கிறது.