உணவு மற்றும் சுவாசத்திற்கான காற்று என எண்ணிலடங்காத பல நன்மைகளை நமக்கு மரங்கள் அளிக்கின்றன. மரங்களின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகின்றது. அதனால் பல சுற்றுச்சூழல் பாதிப்புகள் நிகழக் கூடும் என்பதால் காடுகள் அதை தடுக்கவும் மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் அரசு மற்றும் அரசு சாரா தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மரத்தை அளிப்பது மிகவும் தவறான ஒன்று. ஆனால் சில நேரங்களில் மரத்தை வெட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி அளிக்கும். அது எப்போது என்றால், சில நேரங்களில் காட்டில் இருக்கும் மரங்களை வெட்டுவதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கும். வெளிநாடுகளில் காட்டுத்தீ மிக அதிகமாக ஏற்படும்.
அதற்கு காரணம் வெப்பம் என்றாலும்,மற்றொரு காரணம் மரங்கள் ஒன்றோடு ஒன்று உரசுவதால் ஏற்படும் வெப்பத்தினாலும் அதிக அளவு காற்று தீ ஏற்படுகிறது. அதனால் அதை தடுப்பதற்கு காடுகளில் கும்பலாக ஏதாவது மரங்கள் இருந்தால் அதற்கு இடையே இடைவெளியை உண்டாக்குவதற்கு ஒரு மரத்தை தனியாக விட்டுவிட்டு சுற்றியுள்ள சில மரங்களை வெட்டி விடுவர். அதற்குதான் அரசும் அனுமதி வழங்குகிறது. நகரங்களில் உள்ள பெரிய மரங்கள் வெட்டப்படும். அதை எதற்காக என்றால் அந்த மரங்கள் மூலமாக வீடுகளுக்கு ஏதாவது ஆபத்து நேரிட்ட இருந்தால் அந்த மரங்கள் வெட்டப்படும். வெளிநாடுகளில் ஒரு மரத்தை வெட்டுவதற்கு 3.5 லட்சம் செலவாகும் என்று கூறப்படுகிறது.