சென்னை தரமணியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவன் சல்மான். 19 வயதான இவர் சொந்த ஊர் திருநெல்வேலி. ஆனால் இவர் தரமணியில் உள்ள தனியார் விடுதியில் நண்பர்களுடன் தங்கி படித்து வந்துள்ளார். சமீபத்தில் சல்மான் தன்னுடைய சொந்த ஊருக்குத் சென்று சில நாட்களுக்கு முன்புதான் சென்னைக்கு வந்தார். இந்நிலையில் அவர் இன்று தான் தங்கியிருந்த விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.
பின்னர் அவருடைய அறையில் அவர் எழுதி இருந்த உருக்கமான கடிதம் சிக்கியது. அதில், மரணத்திற்கு பிறகு என்ன நடக்கும் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும்… என் அம்மாவுக்காக ஐந்தாயிரம் ரூபாய் சேமித்து வைத்திருக்கிறேன் என்று எழுதியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் தற்கொலைக்கு என்ன காரணம்? கல்லூரியில் ஏதேனும் பிரச்சனையா? என்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.