Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மரணத்திலும் பிரியாத தம்பதியினர்…. சோகத்தில் ஆழ்ந்த கிராம மக்கள்….!!!!

கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே கணவன் இறந்த துக்கம் தாளாமல் மனைவியும் அவருடனேயே உயிரிழந்துவிட்டார்.

மரணத்திலும் பிரியாத தம்பதியின் இழப்பு கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது. கீரிப்பாறை அருகே வெள்ளந்தி பகுதியை சேர்ந்தவர் செம்பொன் காணி. 90 வயதான இவர் மனைவி வள்ளியம்மாள் 4 குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த செம்பொன் காணி நேற்று இரவு திடீரென இறந்துவிட்டார். உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வந்துள்ளன. 65 ஆண்டுகள் செம்பொன் காணியோடு இல்வாழ்க்கையில் பயணித்த வள்ளியம்மாள், அவரது பிரிவைத் தாங்காமல் அழுது கொண்டே இருந்துள்ளார்.

துக்கம் அதிகமாகி திடீரென மயங்கி விழுந்து இறந்து விட்டார். கணவன் பிரிவை தாங்காமல் மனைவியும் இறந்ததால் வெள்ளந்தி கிராம மக்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Categories

Tech |