Categories
மாநில செய்திகள்

மரணத்துக்கு பிறகும் கூட சாதி மனிதனை விடவில்லை… தடுத்தால் அவ்வளவுதான்… ஐகோர்ட் எச்சரிக்கை!!

மரணத்திற்குப் பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல பகுதியில் ஜாதி ரீதியான பாகுபாடுகள் பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த வழியாக கொண்டு செல்லக்கூடாது.. அந்த வழியாகதான் செல்ல வேண்டும் என பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் தொடர்ச்சியாக இந்த பிரச்சனை உருவெடுத்து வருகிறது.. இது தொடர்பான பிரச்னை மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டும் இதற்கு நிரந்தர தீர்வு காணப்படாத நிலை இன்றும் இருக்கிறது.. இந்த நிலையில் மரணத்திற்குப் பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லையே என்று வேதனையுடன் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அதாவது, கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகாவில் உள்ள எரிபட்டி பகுதியில் நிலத்திற்கு செல்லும் வழியில் ஒரு சமூகத்தினர் உடல்களை எரிப்பதாகவும், குறிப்பிட்ட சமூகத்தினர் உடல்களை தகனம் செய்ய தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அமிர்தவல்லி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, மரணத்திற்குப் பிறகும் கூட மனிதனை சாதி விடவில்லையே என்று வேதனை தெரிவித்த நீதிபதி ஆன்ந்த் வெங்கடேஷ், மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து தரப்பினரின் உடல்களை தகனம் செய்ய அனுமதிக்க வேண்டும், இதனை தடுப்பவர்களுக்கு எதிராக சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதுபோன்ற நடைமுறைகள் கட்டுப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்..

இதையடுத்து தமிழக அரசு தரப்பில், அனைத்து தரப்பினரும் மயானத்தை பயன்படுத்த அனுமதிக்க கோரி அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மயானம் என அறிவிக்கப்பட்ட பகுதியில் அனைத்து சாதியினரின் உடல்களையும் தகனம் செய்ய அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது..

Categories

Tech |