சுற்றுலா என்பது என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று . அதுவும் குடும்பத்தினரோடு சேர்ந்து சுற்றுலா செல்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். இதுவே அனைவரின் விருப்பமாகவும் இருக்கும். மேலும் பாதுகாப்பான சுற்றுலாவாகவும் இருக்க வேண்டும். ஆனால் உலகிலேயே மிகவும் ஆபத்தான சுற்றுலாத்தலங்கள் இருக்கின்றன. அதற்கும் விரும்பி செல்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அந்த ஆபத்தான சுற்றுலாத்தலங்கள் செல்ல யாராவது திட்டமிட்டிருந்தால் இதையும் கொஞ்சம் தெரிஞ்சிக்கோங்க.
சர்வதேச சுற்றுலா தலமான ஹவாய் எரிமலை எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும். அதன் மீது ஏறுவதற்கு பலரும் விரும்புகின்றன.ர் ஆனால் இது ஆபத்தான செயல் என்பதை அறிந்தும் இதை செய்கின்றனர்.
பொலிவியா நாட்டிலுள்ள மரண சாலை எனப்படும் டெத் ரோட்டில் சைக்கிள்கள் மட்டுமே பாதுகாப்பாக செல்ல முடியும். ஆனால் இது மிகவும் பிரபலமாக இருக்கிறது . இதில் வருடத்திற்கு 300 பேர் பலியாகின்றனர்.
எவரெஸ்ட் சிகரம் உலகிலேயே மிக உயரமானது. இதில் 8800 மீட்டருக்கு மேல் குளிர் கடுமையாக இருப்பதால் மலையில் ஏற முயற்சித்தும் பலரும் இறந்து போகின்றனர். ஆனாலும் பலராலும் எச்சரிக்கையை மீறி மலையில் ஏறத்தான் செய்கின்றன ர்.
பிரேசில் நாட்டில் ஆபத்தான சில நகரங்கள் இருக்கின்றன. ஏனெனில் ரியோடி ஜெனிரோவில் குற்றங்கள் வன்முறை எல்லாமே சாதாரணமாக நடக்கும். ஆனால் இந்த நகரத்திற்கு சுற்றுலா பயணிகள் அசால்ட்டாக செல்கின்றனர்.
துருமெனிஸ்தானில் உள்ள டர்வாஸா காஸ் கிரேட்டர் என்ற இடம் நரகத்துக்கான இடம் என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இந்த நிலத்துக்கு அடியில் இருக்கும் குகையில் எப்பொழுதும் இயற்கை வாயு நிறைந்த மீத்தேன் எரிந்துகொண்டே இருக்கிறது. இவ்வளவு ஆபத்தான பகுதியிலும் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர்.
செர்னோபில் அணு உலை விபத்து ஏற்பட்டு 30 வருடங்கள் ஆனபிறகும் அதன் ஆபத்து நீடித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஆனாலும் சுற்றுலா பயணிகள் பயப்படாமல் சென்று வருகின்றனர்.