ஐபிஎஸ் பிரிவை சேர்ந்த டிஜிபி லோகியா ஜம்மு காஷ்மீரில் உதைவாலோ என்ற பகுதியில் வசித்து வந்தார்- இந்நிலையில் அவர் நேற்று வீட்டில் படுகொலை செய்யப்பட்டு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். லோஹியா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான யாசிர் அகமது இன்று கைது செய்யப்பட்டார். இவர் லோஹியா வீட்டில் வேலை செய்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காவல்துறையினர் இவருடைய பெர்சனல் டைரியை கைப்பற்றினர். அதில் துக்ககரமான இந்தி பாடல்களின் வரிகள் உள்ளன. பிற பக்கங்களில் இதயத்துடிப்பு, வாழ்க்கை மற்றும் இறப்பு குறித்த சிறு குறிப்புகள் உள்ளன. நான் என்னுடைய வாழ்க்கையை வெறுக்கிறேன். வாழ்க்கை துன்பத்தை மட்டுமே தருகிறது. மரணம் மட்டுமே எனக்கு அமைதியை தரும் என்று எழுதியுள்ளார்.