Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

மரணம் தான் தீர்வா…? வாலிபர் எடுத்த விபரீத முடிவு… சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்…!!

 கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள அன்பு நகர் பகுதில் லூயிஸ் பிராட்ரிக் இனிகோ என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிராக் மேனாக சோலகம்பட்டி ரயில் நிலையத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏறுபட்டுள்ளது. இதனால் மனஉளைச்சலில் இருந்த லூயிஸ் தஞ்சாவூரில் இருந்து திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |