நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இவரின் மரணத்தை மனம் ஏற்க மறுக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு எக்மோ கருவி மூலம் மருத்துவர்கள் தொடங்கியதுசிகிச்சை அளித்து வந்தனர். சிகிச்சை பலனின்றி நடிகர் விவேக் காலமானார்.
அவரின் உடல் இல்லத்தில் அனைவரும் அஞ்சலி செலுத்தும் வகையில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதை எடுத்து இவரின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிலிருந்து மேட்டுக்குப்பம் பகுதியில் உள்ள மின் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது. நேரில் வந்து அஞ்சலி செலுத்தாதவர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் “மரணம் மனிதனுக்கு நிச்சயம் என தெரிந்த பின்னும், அதனை மனம் ஏனோ ஏற்க மறுக்கிறது, ஒருசிலர் இறக்கும்போது மட்டும்தான் இப்படி இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.