கோவை நவக்கரை அருகே ரயில் மோதி படுகாயமடைந்த யானை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.
கோவை மாவட்டம் நவக்கரை அருகே கடந்த 15ஆம் தேதி ரயில் மோதி யானை ஒன்று படுகாயம் அடைந்தது. அதனால் வலி தாங்க முடியாமல் யானை துடிதுடித்தது. அதன்பிறகு யானை அடிபட்டு கிடந்த இடத்தில் கூடியிருந்த மக்களும் வனத்துறை அதிகாரிகளும் யானை வலி தாங்காமல் கதறி எதை கண்டு கண்ணீர் வடித்தனர். எப்படியாவது அந்த யானையை காப்பாற்றி விடவேண்டும் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அந்த யானைக்கு தலையில் பலத்த அடிபட்டு இருந்ததால் யானை என்ற சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.