Categories
சினிமா

மரணம் வரப்போகிறது…. கணித்தாரா எஸ்.பி.பி ? வெளியான புது தகவல்…!!

இறக்கும் முன்பே தனது சிலையை தயார் செய்ய எஸ்பிபி ஆர்டர் கொடுத்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் ஆந்திராவை சேர்ந்த சிற்பி ராஜ்குமார் என்பவரிடம் தனது சிலையை தயார் செய்யக் கோரி ஜூன் மாதம் ஆர்டர் கொடுத்துள்ளார். கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சிற்பி உடையார் ராஜ்குமார் என்பவரிடம் எஸ்.பி.பி அவர்கள் தனது தந்தை தாயின் சிலையை செய்ய ஆர்டர் கொடுத்தார். அதன்பிறகு கடந்த ஜூன் மாதம் சிற்பி ராஜ்குமாரை தொடர்புகொண்ட எஸ்.பி.பி தனது சிலையையும் தயார் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

நேரடியாக வந்து ஆர்டர் கொடுக்க முடியாது என்றும் போட்டோ ஷூட் செய்ய முடியாது என்றும் கூறிய அவர் தன்னிடமிருந்த தனது புகைப்படங்களில் சிலதை ஈமெயில் மூலமாக சிற்பிக்கு அனுப்பி வைத்துள்ளார். சிற்பி சிலையை செய்து கொண்டிருந்த சமயத்தில்தான் எஸ்.பி.பி அவர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வீடு திரும்பியதும் சிலையை  ஒப்படைக்க சிற்பி ராஜ்குமார் காத்திருந்தார்.

ஆனால் சிலை செய்து முடித்த நிலையில் எஸ்பிபி அவர்களும் தனது பயணத்தை முடித்துக் கொண்டார். தனது சிலையை எஸ்பிபி அவர்கள் செய்யச் சொன்னது அவர் மரணத்தை முன்னதாகவே தெரிந்து இருப்பாரா  என்ற எண்ணம் உறவினர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அடுத்ததாக தனது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்பதை உணர்ந்தவராக இருந்த எஸ்.பி.பி  அவரது மரணத்தையும் முன்பே தெரிந்திருந்தாரா என்பதை நினைக்கும் போது பெரும் சோகம் உருவாகிறது.

By inza dev

IF YOU WANT TO KNOW MEANS THEN TRY TO FIND ME AND ASK ME

Categories

Tech |