Categories
உலக செய்திகள்

“மரண தண்டனை கைதிகளுக்கு இனி துப்பாக்கி தான்!”.. புதிய சட்டம் நிறைவேற்றிய மாகாணம்..!!

அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தின் சிறையில் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள தென் கரோலினா மாகாணத்தில், சிறையில் மரண தண்டனையை நிறைவேற்ற விஷஊசிகள் பற்றாக்குறை ஏற்பட்டதால் கடந்த 10 வருடங்களாக மரண தண்டனை நிறைவேற்றப்படாமல் இருந்தது.

இந்நிலையில், மரண தண்டனை மின்சார இருக்கைகளால் நிறைவேற்றலாமா அல்லது துப்பாக்கியால் சுட வேண்டுமா என்ற கணக்கெடுப்பில் 66 வாக்குகள் துப்பாக்கியால் சுட வேண்டும் என்று பதிவானது.

எனவே தற்போது நாட்டில் மிசிசிப்பி, ஓக்லஹோமா மற்றும் உட்டா மாகாணங்களை தொடர்ந்து நான்காவது மாகாணமாக தென் கரோலினாவும் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்க தீர்மானித்துள்ளது.

தற்போது 37 கைதிகள் மரணதண்டனைப்பட்டியலில் இருக்கின்றனர். இதில் 3 பேர் மேல்முறையீட்டுக்கு வெளியில் இருப்பதால் முதலில் அவர்களுக்கு மரணதண்டனை வழங்க வாய்ப்புகள் இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

Categories

Tech |