Categories
மாநில செய்திகள்

மரண விபத்திற்கு இடமாற்றம் ரத்து…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!!!

அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து, மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கி இருந்தால் மேற்கொள்ளப்படும் சட்ட விதியில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

அரசு போக்குவரத்துக் கழகத்தின் ஒட்டுநரால் இயக்கப்பட்ட பேருந்து மரணம் ஏற்படுத்திய விபத்தில் சிக்கி இருந்தால்,விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்கள் சட்ட ரீதியான நடவடிக்கைகளுடன் வேறு கிளைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு வந்தனர்.

இந்த நிலையில் மரண விபத்து ஏற்படுத்திய ஓட்டுநர்களை அதே கிளையில் வேறு வழித் தடத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஓட்டுநர்களை மாற்றம் செய்வதை நிறுத்தக் கோரி ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் தற்போது அவர்களை அதே கிளையில் வேறு வழித்தடத்தில் மாற்றம் செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

Categories

Tech |