கடலாடி அருகே பள்ளி மாணவ-மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து கல்வி கற்கும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடலாடி அருகே இருக்கும் கிடாகுளம் கிராமத்தில் 42 வருடங்களாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. இந்த பள்ளி சென்ற பதினைந்து வருடங்களுக்கு முன்பாக பராமரிப்பு செய்யப்பட்டது. ஆனால் தற்பொழுது பள்ளி முழுவதும் இடியும் நிலையில் இருப்பதால் மாணவ-மாணவிகள் கண்மாய் அருகே இருக்கும் மரத்தடியில் கல்வி பயின்று வருகின்றார்கள்.
தற்பொழுது மழை பெய்து கன்மாயில் தண்ணீர் அதிகமாக உள்ளதால் அப்பகுதியின் கரையில் மாணவ-மாணவிகள் நடந்து செல்ல முடியாத நிலை இருக்கின்றது. மேலும் மரத்தடியிலும் கல்வி கற்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டிருக்கின்றது. பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் உடனடியாக மாற்றுக் கட்டிடமும் விரைவில் புதிய பள்ளி கட்டிடமும் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக்கிராம மக்களின் கோரிக்கையாக இருக்கின்றது.