சிவன் சிலையை திருடிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள ஆயிரம்விளக்கு பகுதியில் சுரேஷ்பிரபாகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் 2 1/2 அடி உயரம் உடைய மரத்தினால் ஆன சிவன் சிலை வைத்துள்ளார். அந்த சிலை காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த சுரேஷ் பிரபாகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் திருவல்லிக்கேணியை பகுதியில் வசிக்கும் தமிமுன் அன்சாரி மற்றும் முத்து ஆகிய இருவரும் சிவன் சிலையை திருடி சென்றது தெரியவந்ததுள்ளது. அதன் பின் 2 பேரையும் காவல்துறையினர் கைது செய்து சிவன் சிலையை பத்திரமாக மீட்டனர்.