Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மரத்தின் மீது கார் மோதி விபத்து…. 2 பேர் பரிதாப பலி…. பெரும் சோகம்…..!!!!

செங்கல்பட்டு கல்பாக்கம் அருகில் கிழக்கு கடற்கரை சாலையில் கூவத்தூர் அடுத்த வடபட்டினம் எனும் இடத்தில் புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கி சென்ற கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று வலதுபக்க சாலையோரத்திலுள்ள மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரில் பயணம்மேற்கொண்ட சரண் ராஜ்(24), மோகன் ராஜ்(23) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதே காரில் பயணம் மேற்கொண்ட பிரவீன், நந்தா, வேலு போன்றோர் படுகாயமடைந்தனர்.

அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கின்றனர். காரில் பயணம் செய்த இவர்கள் 5 பேரும் கேளம்பாக்கம் அருகேயுள்ள கார் பழுது பார்க்கும் கடையில் பெயிண்டர்களாக பணியாற்றி வந்தனர். தீபாவளி விடுமுறையை முன்னிட்டு புதுச்சேரியிலுள்ள உறவினர்கள் வீட்டுக்கு சென்றுவிட்டு, மீண்டுமாக கேளம்பாக்கம் திரும்பும் வழியில் இவ்விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இது தொடர்பாக கூவத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Categories

Tech |