மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மதுரையில் இருந்து 18 ஐயப்ப பக்தர்கள் ஒரு வேனில் சபரிமலைக்கு சென்றுவிட்டு ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். இந்த வேனை ராமகிருஷ்ணன் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் லோயர்கேம்ப்-குமுளி மலைப்பாதையில் இரைச்சல் பாலம் அருகே இருக்கும் வளைவில் திரும்பிய போது ராமகிருஷ்ணனின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ஜெயராமன், ராமகிருஷ்ணன் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
மற்றவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுபற்றி அறிந்த போலீசார் படுகாயமடைந்த 6 பேரையும் மீட்டு கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.